ஜம்மு காஷ்மீரில் 200 அடி பள்ளத்தில் மினிபஸ் பாய்ந்து 10 பேர் பலி.! 7 பேர் கவலைக்கிடம்

0 2050

ஜம்மு காஷ்மீரில் டோடா என்ற இடத்தில் மினிபஸ் 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்தனர்.

விபத்தில் 16 பேருக்கு படுகாயம் ஏற்பட்ட நிலையில் அவர்களில் 7 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. காயமடைந்தவர்கள் ஹெலிகாப்டர் மூலம் ஜம்மு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஜம்முவில் இருந்து 165 கிலோ மீட்டர் தொலைவில் சுயிகுவாரி என்ற இடத்தில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பஸ் பள்ளத்தில் பாய்ந்தது. டிரைவரின் அலட்சியமே விபத்துக்கு காரணம் எனவும் கூறப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments