கொரோனா காலகட்டத்திலும் இந்திய - ஆசியான் உறவுகள் மேலும் வலுவடைந்துள்ளது - பிரதமர் பெருமிதம்
கொரோனா காலகட்டத்திலும் இந்தியாவுக்கும் ஆசியான் நாடுகளுக்கும் இடையேயான உறவுகள் மேலும் வலுவடைந்துள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். 18 ஆவது ஆசியான்-இந்தியா உச்சி மாநாட்டில் காணொலி வாயிலாக பங்கேற்று பேசிய அவர் இதைத் தெரிவித்தார்.
கொரோனா, ஆசியான் உறுப்பு நாடுகளுக்கு ஏராளமான சவால்களை ஏற்படுத்தியதாக மோடி கூறினார். இந்தியாவுக்கும் ஆசியான் நாடுகளுக்கும் இடையே உள்ள பரஸ்பர உறவு மேலும் உறுதியாகும் என்ற அவர் எதிர்காலத்திலும் அது தொடரும் என்றார்.
ஆசியான் நாடுகளின் கூட்டுறவு இந்தியாவுக்கு மிகவும் முக்கியமானது என்ற மோடி, மரபுகள், பாரம்பரியம், மொழிகள், நூல்கள்,கட்டிடக்கலை, உணவு உள்ளிட்டவற்றில் இந்தியாவும் ஆசியான் உறுப்பு நாடுகளும் பல அம்சங்களை பங்கிட்டுள்ளன எனகூறினார்.
அடுத்த ஆண்டு ஆசியான் அமைப்புடனான இந்தியாவின் உறவு 30 ஆண்டுகளை எட்டும் என்ற அவர், இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தினத்தை ஆசியான்-இந்தியா நட்புணர்வு ஆண்டாக கொண்டாடுவோம் எனவும் தெரிவித்தார்.
Comments