கோவிட் தடுப்பூசி தயாரிப்பு காப்புரிமையை பிற நாடுகளுக்கு வழங்க வேண்டும் - AIDS Healthcare Foundation அமைப்பு வலியுறுத்தல்

0 2045

லகிலேயே கொரோனா இறப்பு விகிதம் மெக்சிகோவில் அதிகமாக  பதிவாகி உள்ள நிலையில், கோவிட் தடுப்பூசி தயாரிப்பு காப்புரிமையை பிற நாடுகளுக்கு வழங்க  AIDS Healthcare Foundation அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

உலகில் தயாரிக்கப்படும் மொத்த தடுப்பூசிகளில் சுமார் 76 சதவீதம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா உள்ளிட்ட பணக்கார நாடுகளுக்கு மட்டும் செல்வதாக AIDS Healthcare Foundation தெரிவித்துள்ளது.

இந்த வார இறுதியில் இத்தாலி தலைநகர் ரோமில் ஜி-20 மாநாடு நடக்க இருக்கும் நிலையில், அதில் கலந்து கொள்ளும் தலைவர்களின் கவனத்தை ஈர்க்கும் முயற்சியாக மெக்சிகோவின் பாரம்பரிய உடைகளை அணிந்து AIDS Healthcare Foundation அமைப்பினர் நடனமாடினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments