இத்தாலியில் பயணிகளை கொண்டுச் செல்ல பேட்டரியில் இயங்கும் பறக்கும் டாக்ஸி!
ரோமில் விமான நிலையத்தில் இருந்து நகரங்களுக்கு பயணிகளை கொண்டுச் செல்லும் பறக்கும் டாக்ஸியின் மாதிரி காட்சிப்படுத்தப்பட்டது.
Volocopter என்னும் ஜெர்மனியை சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனம், பேட்டரியில் இயங்கும் இந்த டாக்ஸியை வடிவமைத்துள்ளது. இரண்டு பேர் பயணம் செல்லும் வகையிலும், உடைமைகளை வைக்க தனி லக்கேஜ் கம்பார்ட்மென்டுடனும் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த டாக்ஸியில் 18 மின் மோட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன.
2024 முதல் ரோமில் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அப்போது Fiumicino விமான நிலையத்தில் இருந்து ரோமின் மைய பகுதிக்கு செல்ல சாதாரணமாக 45 நிமிடம் ஆகும் நிலையில், பறக்கும் டாக்ஸியில் சென்றால் 15 நிமிடம் மட்டுமே ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments