உட்கட்சி பூசலால் காங்கிரசில் இருந்து விலகி புதிய கட்சி தொடங்குவதாக பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் அமரிந்தர் சிங் அறிவிப்பு!

0 2425

உட்கட்சி பூசலால் காங்கிரசில் இருந்து விலகி புதிய கட்சி தொடங்குவதாக அறிவித்துள்ள பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் அமரிந்தர் சிங் இன்று டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்கிறார்.

இந்த சந்திப்பின் போது, விவசாயிகள் போராட்டத்திற்கு காரணமான, புதிய வேளாண்  சட்டங்கள் குறித்து அமித் ஷாவிடம் பேச உள்ளதாக அமரிந்தர் சிங் தெரிவித்துள்ளார். விவசாயிகள் பிரச்னை குறித்து பேச்சுவார்த்தை நடத்தும் அமரிந்தர் சிங்கின் முடிவை பாஜக வரவேற்றுள்ளது.

அந்த பிரச்னைக்கு தீர்வு காண உதவும் பட்சத்தில், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் அமரிந்தர் சிங் கூட்டணி அமைப்பார் என்ற பேச்சு நிலவுவதால் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

 

 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments