ஆவடியில் பேருந்து படிக்கட்டில் தொங்கியதை தட்டிக் கேட்ட நடத்துநர், ஓட்டுநர் மீது கூட்டாளிகளுடன் வந்து சரமாரியாக தாக்கிய இளைஞர்!

0 4748

சென்னையை அடுத்த ஆவடியில் பேருந்து படிக்கட்டில் தொங்கியதை தட்டிக் கேட்ட நடத்துநர், ஓட்டுநர் மீது கூட்டாளிகளுடன் வந்து சரமாரியாக தாக்குதல் நடத்திய இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.

நேற்றிரவு பூந்தமல்லியில் இருந்து செங்குன்றம் சென்ற மாநகர அரசு பேருந்தில் ஆவடியில் ஏறிய இளைஞர் ஒருவர், படிக்கட்டில் நின்று கொண்டு ஆபத்தான முறையில் பயணம் செய்த நிலையில், ஓட்டுநரும், நடத்துநரும் அவரைக் கண்டித்து, உள்ளே வருமாறு கூறியிருக்கின்றனர்.

அதற்கு இளைஞர் மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், பாதியிலேயே இறக்கிவிட்டு சென்றிருக்கின்றனர். இதனால், ஆத்திரமடைந்த அவர் கூட்டாளிகளை வரவழைத்து பேருந்தை வழிமறித்து, கதவை உடைத்து ஓட்டுநர், நடத்துநர் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

தாக்குதலுக்கு ஆளான ஓட்டுநரும், நடத்துநரும் மேல் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments