ஷாருக்கானின் மகன் மீதான போதைப் பொருள் வழக்கை வான்கடே விசாரிக்கத் தடையில்லை - போதைப் பொருள் தடுப்புப் பிரிவு!
நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் உள்பட 20 பேர் கைது செய்யப்பட்ட சொகுசுக் கப்பலில் போதை விருந்து தொடர்பான வழக்கை சமீர் வான்கடே தொடர்ந்து விசாரிக்கலாம் என்று போதைப் பொருள் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
அவர் மீது எழுந்த புகார் குறித்து தக்க ஆதாரம் கிடைக்கும் வரையில் அவர் இவ்வழக்கை விசாரிக்கத் தடையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போதைப் பொருள் தடுப்புப் பிரிவு சமீர் வான்கடே தலைமையில் அமைக்கப்பட்டிருக்கும் தனிக் குழு ஒன்று சொகுசுக் கப்பலில் போதைப் பொருள் விருந்து குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளது.
இதில் முக்கிய சாட்சியான பிரபாகர் என்பவர் வான்கடேவுக்கு 50 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக தமது வாக்குமூலத்தில் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக 4 மணி நேரம் சமீர் வான்கடேவிடம் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். வான்கடே மீதான புகார்கள் அனைத்தும் விசாரணைக்கு உட்படுத்தப்படும் என்றும் போதைப் பொருள் தடுப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Comments