ஓமனில் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளின் பட்டியலில் கோவாக்சின் சேர்ப்பு..!
கோவாக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்டோர் ஓமன் நாட்டுக்குத் தனிமைப்படுத்தலின்றிச் செல்லலாம் என அந்நாட்டு அரசு அறிவித்திருப்பது, இந்தியாவில் இருந்து செல்லும் தொழிலாளர்களுக்குப் பெரிதும் பயனளிக்கும்.
ஓமனில் உள்ள இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஓமனில் அங்கீகரிக்கப்பட்டுள்ள தடுப்பூசிகளின் பட்டியலில் கோவாக்சின் சேர்த்துக்கொள்ளப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளது.
புறப்படுவதற்கு 14 நாட்களுக்கு முன் கோவாக்சின் 2 தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் ஓமனில் தனிமைப்படுத்தப்பட வேண்டிய தேவையில்லை எனக் குறிப்பிட்டுள்ளது. அதேநேரத்தில் புறப்படுமுன் கொரோனா சோதனை செய்து சான்று பெற்றிருக்க வேண்டும். கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக்கொண்டோர் ஓமனுக்குச் சென்றால் தனிமைப்படுத்தல் இல்லை என முன்பே அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments