கென்யாவில் தனித்துவிடப்பட்ட யானை குட்டிகளுக்கு மாட்டுப்பாலுக்கு பதில் வழங்கப்படும் ஆட்டுப்பால்
கென்யாவில் உள்ள யானைகள் காப்பகம் ஒன்றில் தனித்துவிடப்பட்ட குட்டிகளுக்கு ஆட்டுப்பால் வழங்கப்படுகிறது.
வடக்கு கென்யாவின் சம்புரு கவுன்டியில் உள்ள The Reteti யானைகள் காப்பகத்தில் மாட்டுப் பால் பவுடருக்கு பதிலாக ஆட்டு பால் பவுடர் தண்ணீரில் கலந்து யானை குட்டிகளுக்கு கொடுக்கப்படுகிறது.
மாட்டுப்பாலில் இருப்பதை விட ஆட்டுப்பாலில் அதிக புரதச் சத்து உள்ளதாகவும், சுலபமாக ஜீரணமாவதாகவும் காப்பகத்தின் ஊட்டச்சத்து நிபுணர் தெரிவித்துள்ளார். மேலும், ஆட்டுப்பாலை பயன்படுத்துவதன் மூலம் பராமரிப்பு செலவு குறைவதுடன், ஆடு வளர்க்கும் உள்ளூர் மக்களுக்கு ஒரு நல்ல வருமானமாகவும் அமைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments