நேரடி விதைப்பு மூலம் பயிர் செய்யப்படும் பாரம்பரிய நெல் இரகங்கள்... செலவீனங்களைக் குறைத்து லாபமீட்டி வரும் பொறியியல் பட்டதாரி
கரூரில் பாரம்பரிய நெல் ரகங்களை நேரடி விதைப்பு மூலம் பயிர் செய்து இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு வரும் பொறியியல் பட்டதாரி ஒருவர் செலவீனங்கள் பெருமளவு குறைந்து லாபம் அதிகம் கிடைப்பதாகக் கூறுகிறார்.
சுக்காலியூரைச் சேர்ந்த கட்டிடப் பொறியாளரான சிவக்குமார் என்பவர், தனக்குச் சொந்தமான நிலத்தில், பஞ்ச கவ்யம், அமிர்தக்கரைசல் உள்ளிட்ட இயற்கை இடுபொருட்களைக் கொண்டு விவசாயம் செய்து வருகிறார்.
நாற்றாங்கால் அமைத்து, அதிலிருந்து நாற்றுகளைப் பிடுங்கி, பிறகு நடுவது செலவு பிடிக்கும் விஷயம் எனக் கூறும் சிவக்குமார், கைவண்டி வடிவிலான நவீன விதைப்பு இயந்திரத்தைக் கொண்டு விதை நெல்லை, சமமான இடைவெளியில் விதைத்து வருகிறார்.
இந்த முறையில் ஏக்கருக்கு 7 ஆயிரம் ரூபாய் வரையில் செலவு குறைவதாக அவர் கூறுகிறார்.
Comments