ஈக்வடாரில் அதிபர் லாஸோ-வின் பொருளாதார கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்
தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் அதிபர் Guillermo Lasso-வின் பொருளாதார கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டம் வன்முறையில் முடிந்தது.
கடந்த மே மாதத்தில் பதவியேற்ற அதிபர் Lasso சர்வதேச சந்தையில் ஏற்படும் விலை மாற்றத்துக்கு ஏற்ப எரிபொருள் விலையை நிர்ணயிக்காமல், நிலையான ஒரு விலையை நிர்ணயித்தார்.
இந்த முடிவுக்கு தொழிற் சங்கங்களும், பிற பிரிவினரும் எதிர்ப்பு தெரிவித்து சாலைகளை அடைத்து போராட்டத்தில் குதித்தனர். வன்முறையில் ஈடுபட்டவர்களை குதிரைகள் மற்றும் பைக்கில் வந்த போலீசார் கலைத்தனர்.
Comments