ஆரணி கூட்டுறவு வங்கியில் ரூ.2.39 கோடி அளவுக்கு போலி நகைகள் வைத்து மோசடி, 3 பேர் பணியிடை நீக்கம்
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி கூட்டுறவு வங்கியில் போலி நகைகளை கொண்டு 2 கோடியே 39 லட்சம் ரூபாய் அளவில் நகை கடன் வழங்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
ஆரணி கூட்டுறவு நகர வங்கியில் 4,537 பொது நகை கடன்கள் மூலம் 29 கோடியே 12 லட்சம் ரூபாய் கடன் நிலுவையாக இருந்தது கண்டறியப்பட்டது. இது குறித்து அடகு வைத்த நகைகள் சரிபார்க்கப்பட்ட போது 77 பேருக்கு போலியான மற்றும் தரம் குறைவான நகைகளை ஈடாக வைத்து சுமார் 2 கோடியே 39 லட்ச ரூபாய் அளவில் போலி நகை கடனும், அனுமதிக்கப்பட்ட தொகையை விட கூடுதலாக 12 லட்சம் ரூபாய் கடனும் வழங்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து, ஆரணி கூட்டுறவு நகர வங்கியின் மேலாண் இயக்குனர் கல்யாணகுமார் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், மேலும் 3 பணியாளர்கள் பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிடப்பட்டது.
Comments