12 வயதிற்கு மேற்பட்ட சிறாருக்கான தடுப்பூசி திட்டம் மிக விரைவில் துவங்கும் ; சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா

0 2418
12 வயதிற்கு மேற்பட்ட சிறாருக்கான தடுப்பூசி திட்டம் மிக விரைவில் துவங்கும்

ஸைடஸ் கெடிலாவின் ஸைகோவ்-டி தடுப்பூசி விலை முடிவு செய்யப்பட்டு விட்டதால் 12 வயதிற்கு மேற்பட்ட சிறாருக்கான தடுப்பூசி திட்டம் மிக விரைவில் துவங்கும் என சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

இந்த தடுப்பூசிக்கு அவசரகால பயன்பாட்டுக்கான அனுமதியை தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர் ஏற்கனவே வழங்கி உள்ளதால் அதன் உற்பத்தி ஏற்கனவே துவங்கி விட்டதாகவும் அவர் கூறினார்.

இந்த தடுப்பூசியின் விலை, அதன் தயாரிப்பாளர்கள் கேட்ட விலையை விட குறைவாகவே நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளை விட விலை அதிகம் எனவும் மன்சுக் மாண்டவியா கூறினார்.

ஸைகோவ்-டி தடுப்பூசியானது மூன்று டோசுகள் கொண்டதும், பிரத்யேக சிரிஞ்ச் வாயிலாக போடக்கூடியதுமாகும். 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments