மழைக் காலங்களில் மின் விபத்துகளை தவிர்ப்பது எப்படி?
வடகிழக்குப் பருவமழை தொடங்கி உள்ள நிலையில், மழைக் காலங்களில் மின் விபத்துக்களைத் தவிர்ப்பதற்கான வழிமுறைகளை மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால், வரும் நாட்களில் அதிகளவு மழைப்பொழிவு இருக்க வாய்ப்புள்ளது. இதுபோன்ற நேரங்களில் மின்சாரம் தொடர்பான விபத்துக்களை தவிர்ப்பது குறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அவற்றை தற்போது பார்ப்போம்..
காற்று மற்றும் மழைக்காலங்களில் மின் கம்பங்கள், மின் மாற்றிகள், மின் கம்பிகள்,மின் பகிர்வு பெட்டிகள் மற்றும் ஸ்டே கம்பிகள் அருகில் செல்ல வேண்டாம். மின் கம்பிகள் அறுந்து விழுந்தால் அதன் அருகில் சென்று தொட முயற்சிக்காமல் மின் வாரிய அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்
இடி, மின்னலின் போது மரத்திற்கு அடியிலோ, வெட்ட வெளியிலோ செல்லக் கூடாது. மின் சாதனப் பொருட்களை பயன்படுத்தக்கூடாது ஈர கைகளால் சுவிட்சுகளை இயக்கக்கூடாது
மின் சாதனங்களை பயன்படுத்தும் போது நில இணைப்புடன் கூடிய மூன்று பின் சாக்கெட்டு பிளக்குகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மின் கம்பத்திலோ அதை தாங்கும் கம்பியிலோ கால்நடைகளை கட்டுவதை தவிர்ப்பதோடு, மின் கம்பங்களை பந்தல்களாகவோ, விளம்பர பலகைகளாகவோ பயன்படுத்தக்கூடாது..
Comments