முதியோர் இல்லத்தின் பெயரை பயன்படுத்தி வசூல் வேட்டை.. 3 பேரை பிடித்து போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள்..

0 4509
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே முதியோர் இல்லத்தின் பெயரை பயன்படுத்தி பணம் வசூல் செய்து மோசடியில் ஈடுபட்ட ஒரு பெண் உள்ளிட்ட 3 பேரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே முதியோர் இல்லத்தின் பெயரை பயன்படுத்தி பணம் வசூல் செய்து மோசடியில் ஈடுபட்ட ஒரு பெண் உள்ளிட்ட 3 பேரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

ஆலஞ்சி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், அன்னை தெரேசா முதியோர் இல்லத்தின் பெயரில் போலி ரசீது தயாரித்து நன்கொடையாக பணம் வசூலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே ஆலஞ்சி கிறிஸ்தவ ஆலயம் அருகே பணம் வசூலிக்க சென்ற அப்பெண்ணிடம் தகவல்களை கேட்ட போது முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால் சந்தேகமடைந்த பொதுமக்கள் அவரை போலீசில் ஒப்படைத்தனர். அதே போன்று , அன்பு மலர் என்ற அமைப்பின் பெயரை சொல்லி பண வசூலில் ஈடுபட்ட இரண்டு இளைஞர்களையும் போலீசார் கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments