கோயம்பேட்டில் செயற்கையாக பழுக்க வைக்கப்பட்டிருந்த 15 டன் வாழைப் பழங்கள் பறிமுதல்.. 45 கடைகளுக்கு அபராதம்!
சென்னை கோயம்பேடு சந்தையில் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்டிருந்த 15 டன் வாழைப்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அதனை விற்பனை செய்த 45 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
புகாரின் பேரில் உணவுபாதுகாப்புத்துறை அதிகாரிகள் கோயம்பேட்டில் திடீர் ஆய்வு மேற்கொண்ட போது, எத்தனால் என்ற கெமிக்கல் மூலம் வாழைப் பழங்கள் பழுக்க வைக்கப்பட்டது தெரியவந்தது. பண்டிகை காலங்களை பயன்படுத்தி கலப்பட மற்றும் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட பொருட்களை விற்பனை செய்வதை வியாபாரிகள் நிறுத்த வேண்டும் எனவும், மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
எத்தனால் பயன்படுத்தி பழுக்க வைக்கப்பட்ட பழங்களை சாப்பிடும் போது, வாந்தி, செரிமானக் குறைவு போன்ற உடல் உபாதைகள் ஏற்படுவதோடு, புற்றுநோய் வரவும் வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
Comments