தமிழகத்தில் இல்லம் தேடிக் கல்வி திட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழகத்தில் இல்லம் தேடிக் கல்வி திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.
கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடி இருந்ததால் மாணவர்களின் கல்வி திறனில் எந்த ஒரு குறைபாடும் ஏற்பட்டு விடக்கூடாது என்ற நோக்கத்துடன் தமிழக அரசு சார்பில் இல்லம் தேடி கல்வித் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டம் தமிழகத்தில் முதன்முதலில் கடலூர், திண்டுக்கல், ஈரோடு,காஞ்சிபுரம், கன்னியாகுமரி, விழுப்புரம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட உள்ளது.
அந்த வகையில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்துள்ள முதலியார் குப்பம் பகுதியில் இல்லம் தேடிக் கல்வி திட்டம் நிகழ்ச்சியினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.
Comments