அமெரிக்காவில் 5 முதல் 11 வயதுக்கு உட்பட்டோருக்கான ஃபைசர் தடுப்பூசிக்கு அனுமதி

0 1769

அமெரிக்காவில் 5 முதல் 11 வயதுடையவர்களுக்கு ஃபைசர் கொரோனா தடுப்பூசியை செலுத்த அரசின் மருத்துவ ஆலோசனைக் குழு அனுமதி வழங்கி உள்ளது.

தங்கள் நிறுவனத்தின் தடுப்பூசி குழந்தைகளுக்கு 91 சதவீதம் வரை பாதுகாப்பானது என அண்மையில் அறிவித்த பைசர் நிறுவனம் அதற்கான ஆய்வு விபரங்களை வெளியிட்டது. இந்த நிலையில் 5 முதல் 11 வயதுடையவர்களுக்கு பைசர் தடுப்பூசியை செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்க உணவு மற்றும் மருத்துவ கட்டுப்பாடு ஆணையம் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்ட பின் நவம்பர் மாதம் முதல் ஏறத்தாழ 28 மில்லியன் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிட்டுள்ளதாக மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments