நீர்மூழ்கிக் கப்பல் ரகசியங்களை வெளியிட்டது தொடர்பாக கடற்படை அதிகாரி உள்பட 5 பேர் கைது
நீர்மூழ்கிக் கப்பல் தொடர்பான ரகசியங்களை வெளியிட்டது தொடர்பாக கடற்படை அதிகாரி மற்றும் முன்னாள் அதிகாரிகள் இருவர் உள்பட 5 மும்பையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அங்கீகரிக்கப்படாத சில பணியாளர்களிடம் இருந்து நிர்வாக மற்றும் வணிக ரீதியான தகவல்கள் கசிந்ததாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக விசாரணை நடந்து வருவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கைது செய்யப்பட்டவரில் ஒருவர் லெப்டினன்ட் கர்னலுக்கு இணையான கமாண்டர் பதவியில் இருந்தவர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நீர்மூழ்கிக் கப்பலின் ரகசியம் கசிந்தது தொடர்பாக இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சிபிஐ அதிகாரிகள் கூறியுள்ளனர்.
Comments