டிராவல்ஸ் அதிபர் வீட்டில் கைவரிசை காட்டிய கும்பலில், தென் இந்தியாவில் பல கொள்ளையில் தொடர்புடைய தம்பதி கைது

0 3443

சென்னை அண்ணா நகரில் டிராவல்ஸ் அதிபர் வீட்டில் கைவரிசை காட்டிய கும்பலில் தென் இந்தியாவில் பல கொள்ளை சம்பவங்களில் தொடர்புடைய தம்பதியர் கைது செய்யப்பட்டனர்.

பாக்கியலெஷ்மி டிராவல்ஸ் அதிபரான இளங்கோவன் வீட்டில், குடும்பத்தினரை ஒரு அறையில் வைத்து பூட்டிவிட்டு 100 சவரன் தங்க நகைகள் மற்றும் பல லட்சம் மதிப்பிலான வைர நகைகள், வெள்ளிப் பொருட்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

இந்த சம்பவத்தில் பிரபல கொள்ளையனான திருவாரூர் முருகனின் முக்கிய கூட்டாளி தினகரன், அவனது மனைவி உஷா உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

பூட்டியிருக்கும் வீடுகளை ஆட்டோவில் சென்று நோட்டமிட்டு பின் இரவில் கொள்ளையடிப்பது இந்த தம்பதியரின் பாணி என போலீசார் தெரிவித்தனர். இவர்களிடம் இருந்து 65 பவுன் தங்க நகை, 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வைர நகைகள், ரொக்கம் இரண்டரை  லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.   

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments