முல்லை பெரியாறு அணையை முடக்க மலையாள நடிகர்கள் சதி..! தமிழ் நடிகர்கள் மவுனம் கலையுமா ?

0 6379
முல்லை பெரியாறு அணையை முடக்க மலையாள நடிகர்கள் சதி..! தமிழ் நடிகர்கள் மவுனம் கலையுமா ?

மிழகத்தில்  தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளுக்கு வாழ்வாதரமாக விளங்கும் முல்லை பெரியாறு அணையின் செயல்பாட்டை நிறுத்திவைக்க வேண்டும் என்று மலையாள திரையுலக முன்னணி நாயகர்கள் சமூக வலைதளங்களில் குரல் கொடுத்து வரும் நிலையில் , அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டிய தமிழ் திரையுலக முன்னனி நாயகர்கள் மவுனம் காத்து வருகின்றனர்.

பென்னிகுயிக்கால் கட்டப்பட்டு அசைக்க முடியாத நம்பிக்கையாய் நிலைத்து நிற்கும் முல்லை பெரியார் அணையின் செயல்பாட்டை முடக்க கேரள அரசு கடந்த காலங்களில் பல விதமான முயற்சிகள் மேற்கொண்ட நிலையில் அனைத்தும் சட்ட நடவடிக்கைகளால் முறியடிக்கப்பட்டுவிட்டது.

இந்த அணையால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டப்பகுதிகளில் 2,08, 144 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது. இங்குள்ள விவசாய நிலங்களுக்கு முக்கிய நீர் ஆதரமாக விளங்கும் முல்லை பெரியாறு அணையின் பழமையை காரணம் காட்டி, அதனால் கேரளாவிற்கு ஆபத்து என்பது போன்ற மாயத்தோற்றத்தை கட்டமைக்க மீண்டும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் டி கமிஷன் முல்லை பெரியார் டேம் என்ற ஹேஷ் டாக் மூலம் சமூக வலைதளங்களில் முல்லை பெரியாறு அணையை முடக்கவும் , அதனை இடிக்க வேண்டும் என்ற புதிய கோஷத்தை கேரள நெட்டிசன்கள் முன்னெடுத்துள்ளனர்.

இந்த கருத்துக்கு வலுசேர்க்கும் விதமாக மலையாள நடிகர் உன்னி முகுந்தன் எனபவர் வெளியிட்டுள்ள பதிவில், முல்லைப்பெரியாறு அணை குறித்த நமது அச்சத்தை தேசிய அளவில் கொண்டு செல்ல வேண்டும் என்றும் அப்போது தான் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

அவருக்கு அடுத்தபடியாக தமிழில் மொழி, ராவணன், நினைத்தாலே இனிக்கும் உள்ளிட்ட படங்களில் நாயகனான நடித்துள்ள மலையாள நடிகர் பிரித்விராஜ், 125 ஆண்டு கால பழமையான அணை இப்போதும் செயல்பாட்டில் இருப்பதை நியாயப்படுத்த முடியாது என்றும் அரசியல் பொருளாதார காரணங்களை ஒதுக்கி வைத்து விட்டு சரியான முடிவெடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது , 40 லட்சம் மக்களின் உயிர்களை காப்பாற்ற வேண்டும் என்றால் முல்லை பெரியார் அணையின் செயல்பாட்டை நிறுத்தி வைத்தே ஆக வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

முல்லைப்பெரியாறு அணையில் நீர் தேக்கும் அளவை குறைப்பதற்காக பல கட்ட குட்டிகரணங்களை அடித்து வரும் கேரள அரசு மறைமுகமாக தற்போது சமூக வலைதள குழுக்களை தூண்டிவிட்டு முல்லை பெரியார் அணைக்கு எதிரான அச்சத்தை பரப்பி அவதூறு பிரச்சாரமாக செய்து வருகின்றது.

அதே நேரத்தில் தாங்கள் நடிக்கும் சினிமாவில் எல்லாம் விவசாயத்தை காக்க வந்த காப்பான் போல கருத்து சொல்லும் தமிழ் சினிமாவின் முன்னனி நடிகர்களில் ஒருவர் கூட இதுவரை மலையாள நடிகர்களின் இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் மவுனம் காத்து வருகின்றனர்

தமிழ் சினிமாவில் தற்போது உள்ள சில முன்னனி நடிகர்களுக்கு கேரளாவிலும் கனிசமான ரசிகர்கர்கள் உருவாகி இருப்பதால் அவர்களது படங்கள்அங்கும் சில கோடிகளை வருமானமாய் ஈட்டுவது குறிப்பிடதக்கது.

முல்லைபெரியார் குறித்து எதிர் கருத்துச்சொல்லி மலையாள தேசத்து மக்களின் பகையை சம்பாதிப்பதோடு, கூடுதல் வருவாயையும் இழக்க நேரிடும் என்பதால் நம்மவர்கள் மவுனம் காப்பதாக விவரம் அறிந்த திரையுலகினர் தெரிவித்துளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments