தலிபான் அரசுக்கு, 10 லட்சம் டாலர் நிதி உதவி அளிப்பதாக சீனா அறிவிப்பு
தலிபான் ஆட்சி நடைபெறும் ஆப்கானிஸ்தானுக்கு 10 லட்சம் அமெரிக்க டாலர் நிதி உதவி அளிப்பதாக சீனா அறிவித்துள்ளது.
தலிபான் அரசின் பொறுப்பு துணை பிரதமர் முல்லா அப்துல்கானி பரதர் திங்களன்று, சீன வெளியுறவு அமைச்சரை வாங்யீயை சந்தித்துப் பேசியதை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ஆப்கானிஸ்தானை மறுகட்டமைப்பு செய்ய உதவி செய்யப்படும் என்று இருதரப்பு சந்திப்பின் போது சீனா உறுதி அளித்தது.
மேலும் உணவுப் பொருட்கள், மருந்துகள் உள்ளிட்ட 50 லட்சம் அமெரிக்க டாலர் மதிப்பிலான மனிதாபிமான உதவிகளையும் அளிக்க சீனா உறுதி அளித்திருப்பதாக தலிபான் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
Comments