டெல்லி மக்கள் அயோத்தியா ராமர் கோவிலுக்கு செல்ல இலவச ஏற்பாடு - அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு

0 2219

டெல்லி மக்கள் அயோத்தியா ராமர் கோவிலுக்கு புனித யாத்திரை செல்வதற்கான எல்லா செலவுகளையும் டெல்லி அரசே ஏற்கும் என முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

அயோத்தியாவுக்கு வருகை தந்த அவர் அங்குள்ள ராம்லல்லாவில்  வழிபாடு நடத்திய பின் செய்தியாளர்களிடம் பேசினார். ஏற்கனவே வைஷ்ணோ தேவி, ஷிர்டி, ஹரித்வார், ரிஷிகேஷ் உள்ளிட்ட புனித தலங்களுக்கு டெல்லி அரசு இலவச புனித யாத்திரையை அளித்து வருவதாக கூறிய அவர், அந்த பட்டியலில் அயோத்தி ராமர் கோவிலும் சேர்க்கப்படும் என தெரிவித்தார்.

2014 ல் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக பதிவான வழக்கில் ஆஜராக, சுல்தான்பூர் நீதிமன்றத்திற்கு வந்த அவர் அயோத்தியா ராமர் கோவிலுக்கும் வந்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments