தனிப்பட்ட அரசியல் லாபங்களுக்காக செயல்படுவதை விட்டு விட்டு, ஒழுக்கத்துடன் கட்சிப் பணியாற்ற வேண்டும் - காங். தலைவர்களுக்கு சோனியா எச்சரிக்கை
மாநில காங்கிரஸ் தலைவர்கள் தெளிவின்றி இருப்பதாக கூறியுள்ள சோனியா காந்தி, தனிப்பட்ட அரசியல் லாபங்களுக்காக செயல்படுவதை விட்டு விட்டு ஒழுக்கத்துடன் கட்சிப் பணியாற்ற வேண்டும் என அவர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
டெல்லியில் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் பங்கேற்ற கூட்டத்தில் பேசிய அவர், அனைவரும் ஒற்றுமையுடன் இருந்து கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்றார். அப்போது தான் அவர்களுக்கும் கட்சிக்கும் வெற்றி கிடைக்கும் என அவர் கூறினார். காங்கிரஸ் ஆளும் பஞ்சாப் மற்றும் சத்தீஸ்கரில் உட்கட்சி பூசல்கள் ஏற்பட்டுள்ள நிலையில் சோனியா இப்படி பேசி உள்ளார்.
Comments