இந்தியாவில் 6 மாநிலங்களில் உருமாறிய கொரோனா AY 4.2 வைரஸ் கண்டுபிடிப்பு..!
கொரோனா உருமாற்ற வைரசான AY 4.2 இந்தியாவில் கேரளா, தெலங்கானா, ஆந்திரா, மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் ஜம்மு காஷ்மீரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த வைரஸ் அதிவேகமாக பரவக்கூடியது என்றாலும் அதனால் உயிரிழப்புகள் அதிகம் இருக்காது என்பதால் மக்கள் அச்சப்படத் தேவையில்லை என ஐசிஎம்ஆர் விஞ்ஞானி Dr.சமீரன் பாண்டா தெரிவித்துள்ளார்.
ஆனால் மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பூசி உள்ளிட்ட கொரோனா கட்டுப்பாட்டு வழிமுறைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்தியாவில் இது வரை 17 மாதிரிகளில் இந்த வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரம் இந்தியாவில் டெல்லா வைரஸ் தான் அதிகம் பரவும் வைரசாக இருக்கும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
Comments