வழக்கமான நிகழ்வுகளை அரசியல் பொருள் கொண்ட சர்ச்சையாக ஆக்குவது சரியல்ல - தலைமைச் செயலர்
அலுவல் ரீதியாக துறைச் செயலாளர்களுக்கு அனுப்பப்பட்ட கடிதம் அவசியமற்ற விவாதப் பொருளாக மாறி உள்ளதாக தலைமைச் செயலாளர் இறையன்பு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் மத்திய, மாநில அரசின் திட்டங்கள் குறித்து தெரிவிக்க ஆளுநரின் செயலர், தலைமைச் செயலருக்கு கடிதம் எழுதிய நிலையில், அனைத்து துறை செயலாளர்களுக்கு இறையன்பு கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில், துறைச் செயலர்களுக்கு எழுதப்பட்ட கடிதம் வழக்கமான நடைமுறைதான் என அவர் விளக்கமளித்துள்ளார்.
மேலும், புதிதாக பொறுப்பேற்ற ஆளுநருக்கு அரசின் திட்டங்களை தெரிவிக்கும் வகையில், அதற்கான தரவுகளை திரட்ட கடிதம் அனுப்பியதாக தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
இதனை அரசியல் பொருள் கொண்ட சர்ச்சை ஆக்குவது சரியானதல்ல என்றும் அவரது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Comments