இயற்கை பேரழிவுகளால் இந்தியாவுக்கு 87 பில்லியன் டாலர் இழப்பு - உலக வானிலை அமைப்பு
கடந்த ஆண்டில் ஏற்பட்ட இயற்கை பேரழிவுகளால் 87 பில்லியன் டாலர் அளவிற்கு இந்தியா இழப்புகளை சந்தித்ததாக உலக வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது.
ஐ.நா. சார்பில் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாடு, ஸ்காட்லாந்தில் வரும் 31ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், உலக வானிலை அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
அதில், ஆசியாவில் கடந்த ஆண்டு பருவநிலை மாற்றத்தால் ஏற்பட்ட இயற்கைப் பேரழிவுகளான புயல், வெள்ளம், வறட்சி ஆகியவற்றால் சீனா, இந்தியா, ஜப்பான் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆசியாவில் அதிகபட்சமாக சீனா 238 பில்லியன் டாலர் அளவுக்கு இழப்பை சந்தித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு தான் ஆசியாவிலேயே மிகவும் வெப்பமான ஆண்டாக இருந்ததாகவும், 1981 முதல் 2010-ஆம் ஆண்டுவரை இருந்த வெப்பநிலையை விட 1 புள்ளி 39 டிகிரி செல்சியஸ் கடந்த ஆண்டு அதிகமாக இருந்ததாக உலக வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது.
Comments