சட்டவிரோதமாக மயக்க மருந்து செலுத்திக்கொண்ட வழக்கில், சாம்சங் துணை தலைவர் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு

0 2712

யக்க மருந்தை சட்டவிரோதமாக பயன்படுத்திய வழக்கில் சாம்சங் நிறுவனத்தின் துணை தலைவர் Lee Jae-yong குற்றவாளி என சியோல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

சுமார் 10 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உலகின் 238-வது செல்வந்தராக உள்ள Lee-க்கு 60 ஆயிரம் டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Lee Jae-yong எடுத்துக்கொண்ட அதே மயக்க மருந்தைதான் மைக்கேல் ஜாக்சன் அளவுக்கு மீறி செலுத்திக்கொண்டு உயிரிழக்க காரணமாக இருந்ததாக கூறப்படுகிறது. 

சமுதாயத்தில் உயர்ந்த பொறுப்பில் உள்ள Lee Jae-yong செய்த குற்றம் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது என நீதிபதி தெரிவித்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஏற்கனவே லஞ்சம் மற்றும் பண மோசடி வழக்கில் இரண்டரை ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று  Lee Jae-yong பரோலில் வெளியே வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments