ஆர்யன் வழக்கில் தலைமறைவாக இருந்த கோசவி, மகாராஷ்டிராவில் மிரட்டல் உள்ளதால், உத்தர பிரதேசத்தில் சரண்
ஆர்யன் கான் கைதாகியுள்ள போதைப்பொருள் வழக்கில் சாட்சியமாக சேர்க்கப்பட்ட கோசவி தலைமறைவாக இருந்ததாக கூறப்பட்ட நிலையில், திங்கட்கிழமை பேட்டியளித்த அவர் பணம் பறித்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.
கொகுசுக் கப்பலில் போதைப்பொருள் தடுப்புப்பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்திய இரவில், ஆர்யன் கானின் தந்தை ஷாருக் கானிடம் கோசவி, அதிகாரிகள் ஆகியோர் 25 கோடி ரூபாய் வரை பேரம் பேசியதாக, மற்றொரு சாட்சியான பிரபாகர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், மகாராஷ்டிராவில் தனக்கு மிரட்டல்கள் வந்ததை அடுத்து, யாருக்கும் தெரியாமல் மறைவாக இருந்ததாகவும், உத்தர பிரதேச காவல்துறையிடம் சரணடைய உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
தனியார் புலனாய்வாளாரான கோசவி மீது தானே, புனே உள்ளிட்ட இடங்களில் மோசடி வழக்குகள் உள்ள நிலையில், அண்மையில் புனே போலீசார் கோசவிக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியிருந்தனர்.
Comments