நடிகர் ரஜினியின் சம்பந்தி தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக பெண் புகார்

0 5292

டிகர் ரஜினியின் சம்பந்தி வணங்காமுடி கொலை மிரட்டல் விடுப்பதாக கூறி பெண் ஒருவர் அளித்த புகார் குறித்து சென்னை பாண்டி பஜார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரஜினியின் 2-வது மகளை திருமணம் செய்த விசாகனின் தந்தையான வணங்காமுடி அபெக்ஸ் லேபரட்டரி என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தின் மற்றொரு பங்குதாரராகவும், தலைமை செயல் அதிகாரியாகவும் இருந்த முரளி ஸ்ரீனிவாசனின் 2-வது மனைவி எனக் கூறி சத்தியபாமா என்ற பெண் அளித்துள்ள புகாரில், தாமும், முரளி ஸ்ரீனிவாசனும் ரகசிய திருமணம் செய்ததாகவும், இருவருக்கும் 3 வயதில் குழந்தை இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.

சில நாட்களுக்கு முன் முரளி ஸ்ரீனிவாசன் உடல்நலம் குன்றி ஹைதராபாத்தில் சிகிச்சை பெற்றதாகவும், தற்போது அவரை பற்றிய எந்த தகவலும் தெரியவில்லை எனவும் அந்த பெண் தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து அபெக்ஸ் நிறுவன உரிமையாளர் வணங்காமுடியிடம் கேட்டபோது, முதலில் உதவுவதாக கூறிவிட்டு பின்னர் வழக்கறிஞரை வைத்து மிரட்டுவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த விவகாரம் குறித்து வணங்காமுடியை, தொடர்புகொண்டு கேட்டபோது, இது முழுக்க முழுக்க பொய்யான புகார் எனவும், முரளி சீனிவாசன் தற்போது தங்களது நிறுவனத்திலேயே இல்லை எனவும் தெரிவித்திருக்கிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments