சீன அரசை விமர்சித்துப் பேசிய ஜாக் மாவின் அலிபாபா நிறுவனத்திற்கு 344 பில்லியன் டாலர் இழப்பு
சீன அரசை விமர்சித்துப் பேசிய ஜாக் மாவின் அலிபாபா நிறுவனத்திற்கு, உலகில் வேறு எந்த நிறுவனத்திற்கும் ஏற்படாத வகையில் 344 பில்லியன் டாலர்கள் சந்தை மூலதன இழப்பு ஏற்பட்டுள்ளதாக புளூம்பர்க் தெரிவித்துள்ளது.
சீன அரசின் நிதிக்கட்டுப்பாட்டு கொள்கைகளுக்கு எதிராக கடந்த அக்டோபரில் ஜாக் மா பேசியதை தொடர்ந்து அவரது தொழில்நுட்ப துணை நிறுவனமான Ant குழுமத்தின் பங்கு விற்பனைக்கு சீன அரசு தடை விதித்தது. அதைத் தொடர்ந்து அலிபாபாவின் பங்குகள் வரலாற்றில் இல்லாத அளவுக்கு சரிவை சந்தித்தன.
எனினும் அதன்பின்னர் எடுக்கப்பட்ட சில சீரமைப்பு நடவடிக்கைகளின் காரணமாக அக்டோபர் 5 ஆம் தேதி பங்கு விலையில் 30 சதவிகிதம் அதிகரித்தாலும் கடந்த அக்டோபரில் இருந்த உச்சபட்ச விலையை விட இப்போதும் அது 43 சதவிகிதம் குறைவாகவே உள்ளதாக புளூம்பெர்க் தெரிவித்துள்ளது.
Comments