சாதி பெயரை சொல்லி திட்டிய வழக்கில் தண்டிக்கப்பட்டவரை விடுதலை செய்தது உச்சநீதிமன்றம்!

0 3272

வன்கொடுமை வழக்கு ஒன்றில் தண்டிக்கப்பட்ட நபரை, தனக்கு இருக்கும் சிறப்பு அதிகாரங்களை பயன்படுத்தி தொடர் விசாரணையில் இருந்து உச்ச நீதிமன்றம் விடுவித்துள்ளது.

கடந்த 1994 ல் மத்திய பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் ராமவதார் என்பவருக்கும் பட்டியலினத்தை சேர்ந்த பிரேம்பாய் என்ற பெண்மணிக்கும் இடையே நிலத்தகராறு ஏற்பட்டது. அப்போது ராமவதார் பிரேம்பாயை ஜாதியை சொல்லி திட்டினார் என வழக்கு பதிவானது.

அதில் வன்கொடுமை சட்டத்தின் கீழ் ராமவதாருக்கு 6 மாத சிறையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. அதை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டை மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்தின் ஜபல்பூர் கிளை தள்ளுபடி செய்தது.

எனவே அவர் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்த அவர், தமக்கும் குறிப்பிட்ட பெண்மணிக்கும் இடையேயான தகராறு தீர்க்கப்பட்டு விட்டதாகவும், வழக்கு விசாரணையில் இருந்து விடுபட்டு இரு தரப்பும் சுமுக உறவை தொடர விரும்புவதாகவும் மனு தாக்கல் செய்தார்.

இதை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, நிலத்தகராறு காரணமாக ஏற்பட்ட விரக்தியினால் மட்டுமே சாதி பெயரை சொல்லி திட்டினார் என்றும் அந்த சாதி மீதான வெறுப்பினால் அல்ல என கூறி ராமவதாரை வழக்கில் இருந்து விடுவித்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments