அரசின் அறிவுறுத்தலின் பெயரிலேயே, சிசிடிவி கேமராக்கள் அகற்றப்பட்டது - அப்போலோ மருத்துவமனை!

0 3179

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது, முந்தைய அரசின் அறிவுறுத்தலின் பேரில் அவரது பிரைவசி காரணமாகவே சிசிடிவி கேமராக்கள் அகற்றப்பட்டதாக அப்பல்லோ மருத்துவமனை உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையத்தின் விசாரணைக்கு தங்கள் மருத்துவர்கள் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரியும், விசாரணைக்கு தடை கோரியும் அப்போலோ மருத்துவமனை உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுவதால் அதன் மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என குற்றம்சாட்டப்பட்டது.

மேலும், ஆணையம் தனது அதிகார வரம்பை மீறி செயல்படுவதாகவும் ஆணையம் எந்தவிதமான உத்தரவு பிறப்பிக்க சட்டத்தில் இடம் இல்லாத போது, தன்னிச்சையாக உத்தரவு பிறப்பிப்பதாகவும் கூறப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments