கோவேக்சினை உலக சுகாதார அமைப்பின் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளின் பட்டியலில் சேர்ப்பது தொடர்பாக தொழில்நுட்ப குழு இன்று ஆலோசனை!
கோவேக்சினை உலக சுகாதார அமைப்பின் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளின் பட்டியலில் சேர்ப்பது தொடர்பாக தொழில்நுட்ப ஆலோசனைக்குழு இன்று ஆலோசனை நடத்துகிறது.
கோவேக்சின் தடுப்பூசிக்கு இதுவரை உலக சுகாதார அமைப்பின் அங்கீகாரம் கிடைக்காத நிலையில், அவர்கள் கோரிய முக்கிய ஆவணங்கள் அனைத்தையும் சமர்ப்பித்ததாக பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், இன்றைய கூட்டத்தில் கோவாக்சினை அங்கீகரிக்க, குழு பரிசீலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து பேசிய உலக சுகாதர அமைப்பின் தலைமை விஞ்ஞானியான சவுமியா சுவாமிநாதன், தங்கள் அமைப்பின் நோக்கம் அதிக தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் வழங்குவது என்றும் அதன்மூலம் அதிக மக்களுக்கு தடுப்பூசி கிடைக்க செய்ய முடியும் என குறிப்பிட்டுள்ளார். இதுவரை ஃபைசர், அஸ்டிராஜெனிகா, ஜான்சன் அண்ட் ஜான்சன், மாடெர்னா, சினோபார்ம் ஆகிய தடுப்பூசிகளுக்கு மட்டும் உலக சுகாதார அமைப்பு அங்கீகாரம் அளித்துள்ளது.
Comments