ஊழல், பொருளாதாரத்தையும், நாட்டின் வளர்ச்சியையும் சீர் குலைக்கிறது என்பதில் சந்தேகமில்லை - உயர்நீதிமன்றம்

0 2341

பொருளாதாரத்தையும், நாட்டின் வளர்ச்சியையும் ஊழல் சீர் குலைக்கிறது என்பதில் சந்தேகமில்லை என உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு கருத்து தெரிவித்துள்ளது.

மாநில மற்றும் மாவட்ட அளவில் அரசுத் துறைகளில் நடைபெறும் ஊழல் மற்றும் சட்டவிரோத செயல்களை கண்காணிக்க சிறப்பு பறக்கும் படையை அமைக்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, எளிமையானது என்பதால் சாதாரண மனிதர்களும் குறுக்கு வழியை ஊக்குவிக்கின்றனர் என கருத்து தெரிவித்தது.

வழக்கு குறித்து மத்திய, மாநில அரசுகள் 4 வாரத்தில் பதில் மனுக்களைத் தாக்கல் செய்யவும், வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமர்வு முன்பாக பட்டியலிடவும் உத்தரவிட்டு விசாரணை 6 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments