லிதுவேனியாவில் ஐஸ் கட்டிகளுக்கு மத்தியில் 3 மணி நேரம் நின்று சாதனை படைத்த இளைஞர்!

0 1815

லிதுவேனியா நாட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஐஸ் கட்டிகள் நிரப்பப்பட்ட தொட்டியில் கழுத்து வரை  சுமார் 3 மணி நேரம் தொடர்ச்சியாக நின்று சாதனை படைத்துள்ளார்.

Valerjan Romanovski என்ற அந்த இளைஞர் அந்நாட்டில் உள்ள Vilnius Old டவுனில் இருக்கும் வரலாற்று சிறப்பு மிக்க சதுக்கத்தில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

கண்ணாடி பெட்டி முழுவதும் ஐஸ் கட்டிகளை நிரப்பிய பின்னர் அதனுள் இறங்கிய அந்த இளைஞர் கழுத்தளவு ஐஸ்கட்டிக்கு நடுவே சுமார் 3 மணி நேரம் ஒரு நிமிடம் தொடர்ச்சியாக நின்றுள்ளார்.

அவரது இந்த சாதனை விரைவில் கின்னஸ் அமைப்பால் அங்கீகரிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதற்கு முன்பு 2 மணி நேரம் 35நிமிடங்கள் ஐஸ் கட்டியில் நின்றதே சாதனையாக இருந்து வருகிறது. 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments