2014ஆம் ஆண்டுக்குப் பிறகு கங்கை நதி நீரின் தரம் உயர்வு - தேசிய கங்கை தூய்மை இயக்கம்!
2014-ஆம் ஆண்டுக்குப் பிறகு கங்கை நதி நீரின் தரம் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது என்று தேசிய கங்கை தூய்மை இயக்கத்தின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் பேசிய அவர், கடந்த 2014-இல் கங்கை நதியில் 32 இடங்களில் குளிப்பதற்கு உகந்த தரத்தில் இருந்த தண்ணீர் தற்போது 68 இடங்களில் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது என்றார். தண்ணீரில் கரைந்திருக்கும் ஆக்சிஜனின் அளவை வைத்து அதன் தரம் நிர்ணயம் செய்யப்படுகிறது என்றும் கூறினார்.
Comments