பாகிஸ்தான் எல்லையை திறக்கக் கோரி வாகன ஓட்டிகள் மறியல்!
பாகிஸ்தான் சாமன் எல்லையை மீண்டும் திறக்கக்கோரி நூற்றுக்கணகான லாரி ஓட்டுநர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சாலையை கற்கள் கொண்டு அடைத்து மறியலில் ஈடுபட்டனர்.
24ஆம் தேதி இரவு சுமார் 3 மணி நேரம் எல்லை திறக்கப்பட்ட நிலையில் மீண்டும் மூடப்பட்டது. ஆப்கான், பாகிஸ்தானின் முக்கிய வணிக போக்குவரத்து பாதையான சாமன் மீண்டும் மூடப்பட்டதால் கோடிக்கணக்கிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
எல்லைக்கு அந்தப்புறம் உள்ள தங்கள் உறவினர்களை பார்க்க முடியவில்லை என்றும், எல்லை கடந்து தங்கள் வேலைக்கு செல்ல முடியாமல் தவிப்பதாக பணியாளர்கள் தெரிவித்தனர்.
Comments