தீபாவளியை முன்னிட்டு நவ.1, 2, 3, ஆகிய தேதிகளில் ரேசன் திறப்பு - தமிழக அரசு!
தமிழகத்தில் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 1, 2, 3 ஆகிய தேதிகளில் நியாய விலைக் கடைகளில் பொருட்கள் விநியோகம் செய்ய அரசு அறிவுறுத்தி உள்ளது.
அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், நவம்பர் 1, 2, 3 தேதிகளில் காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை ரேசன் பொருட்கள் விநியோகிக்க அறிவுறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நியாய விலைக் கடைகளுக்கு தேவையான பொருட்களை முன்நகர்வு செய்து குடும்ப அட்டைதாரர்களுக்கு அனைத்து பொருட்களையும் விநியோகிக்க அறிவுறுத்துவதாகவும், விநியோக பணிகளை கண்காணிக்க வட்ட வழங்கல் அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments