ஷாரூக் மகனை வழக்கில் இருந்து விடுவிக்க 25 கோடி கேட்டதாக வந்த தகவல் உண்மையல்ல... மும்பை போதைப்பொருள் தடுப்பு அதிகாரி மறுப்பு

0 1893

போதைப் பொருள் வழக்கில் சிக்கிய நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானை விடுவிக்க தான் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படும் புகார் ஆதாரமற்றது என போதைப் பொருள் தடுப்பு பிரிவின் மும்பை மண்டல இயக்குநர் சமீர் வான்கடே தெரிவித்துள்ளார்.

ஆர்யன் கானை விடுவிக்க 25 கோடி ரூபாய் லஞ்சம் கேட்டதாக சமீர் வான்கடே மீது குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து இந்தப் புகார் குறித்து விசாரிக்கும்படி போதைப்பொருள் தடுப்பு பிரிவு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் தன்னை எந்த அதிகாரியும் விசாரணைக்கு அழைக்கவில்லை என்று கூறிய வான்கடே, வேறு பணிக்காக தான் டெல்லி வந்ததாகக் குறிப்பிட்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments