சூடான் நாட்டில் அவசரநிலையை அறிவித்தது ராணுவம்... மக்கள் போராட்டம்
ஆப்பிரிக்க நாடான சூடானில் ஆட்சியைக் கலைத்துள்ள ராணுவம், அங்கு அவசர நிலையைப் பிறப்பித்துள்ளது.
முன்னாள் அதிபர் ஒமர் அல்-பஷீர் 2019ல் பதவியிலிருந்து நீக்கப்பட்ட பின் ராணுவம் மற்றும் பல்வேறு குழுக்கள் இணைந்து அதிகாரத்தைப் பகிர்ந்து கொண்டன. இந்நிலையில் தற்போது பிரதமராக இருந்த அப்துல்லா ஹம்டாக் நவம்பர் மாதத்திற்குள் முழுமையான ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று கூறியிருந்தார். ஆனால் அதனை ஏற்காத ராணுவம் அப்துல்லாவையும் அவரது அமைச்சரவை சகாக்களையும் கைது செய்து வீட்டுச் சிறையில் அடைத்தது.
இதனைக் கண்டித்து சூடானில் மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
Comments