நவம்பர் 8ந் தேதி முதல் சர்வதேசப் பயணத்திற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டது அமெரிக்கா
நவம்பர் 8ம் தேதி முதல் சர்வதேச பயணத்திற்கான வழிகாட்டுதல்களை அமெரிக்கா வெளியிட்டுள்ளது.
இதன்படி, நீண்டகாலமாக வெளிநாட்டில் இருந்து அமெரிக்காவுக்குள் வரும் அந்நாட்டு குடிமக்கள் ஒருநாள் முன்பாக எடுக்கப்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்று அவசியம் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் தடுப்பூசி போடாத வெளிநாட்டினர் வரையறுக்கப்பட்ட பகுதியில் மட்டுமே நுழையமுடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்ட அமெரிக்கர்கள் பயணத்திற்கு 3 நாட்களுக்கு முன்பாக கொரோனா பரிசோதனை செய்யவேண்டும் என்று வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
Comments