ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் மேலும் 2 அணிகள் புதிதாக சேர்ப்பு - பிசிசிஐ

0 5274
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் மேலும் 2 அணிகள் புதிதாக சேர்ப்பு

அடுத்தாண்டு நடைபெற உள்ள ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அகமதாபாத் மற்றும் லக்னோவை மையமாக கொண்ட 2 அணிகள் சேர்க்கப்பட உள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

லக்சம்பர்க்கை தலைமையிடமாக கொண்ட சிவிசி கேபிடல் நிறுவனம் அகமதாபாத் அணியையும், ஆர்பிஎஸ்ஜி குழுமம் லக்னோ அணியையும் ஏலத்தில் எடுத்துள்ளன. ஐபிஎல் தொடரில் ஏற்கனவே 8 அணிகள் உள்ள நிலையில், 2 புதிய அணிகளை ஏலத்தில் எடுக்க அடிப்படை விலையாக 2 ஆயிரம் கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்டது.

மொத்தம் 22 நிறுவனங்கள் ஏல விண்ணப்பத்தை வாங்கிய நிலையில், 2 அணிகளை அதிக விலைக்கு கோரிய நிறுவனங்களின் பெயர்கள் துபாயில் அறிவிக்கப்பட்டன. இதில், லக்னோ அணி 7 ஆயிரத்து 90 கோடி ரூபாய்க்கும், அகமதாபாத் அணி 5 ஆயிரத்து 166 கோடி ரூபாய்க்கும் ஏலத்தில் எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments