சசிகலாவுக்கு பினாமிகளாக இருந்தவர்கள் தொடர்ந்த வழக்குகளை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்

0 6969
சசிகலாவுக்கு பினாமிகளாக இருந்தவர்கள் தொடர்ந்த வழக்குகளை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்

 பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட கரன்சி நோட்டுக்களை பயன்படுத்தி சுமார் 1,600 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை வாங்க வி.கே. சசிகலாவுக்கு பினாமிகளாக செயல்பட்டதாக கூறி வருமான வரித்துறை நடவடிக்கையை எடுத்தது.

இதை எதிர்த்து நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் 14 பேர் தாக்கல் செய்த வழக்குகளை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்குகளின் போது மதிப்பிழப்பு செய்யப்பட்ட கரன்சிகளை பெற்று இடத்தை விற்பனை செய்ததற்காக தங்களுக்கு எதிராக பினாமி சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியாது என மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த வருமான வரித்துறை கடும் நிதி நெருக்கடி காரணமாக ஸ்பெக்ட்ரம் மாலை விற்பனை செய்ய உரிமையாளர்கள் முடிவு செய்ததாகவும், அதற்காக அவர்கள் ரியல் எஸ்டேட் ஏஜெண்ட் மூலம் சசிகலாவின் வழக்கறிஞரை அணுகியதாகவும், இந்த சந்திப்பு பண மதிப்பிழப்புக்கு முன் நடந்ததாகவும் வாதிட்டது.

வாங்குபவரின் பெயர் இல்லாமல் ஒப்பந்தங்கள் மேற்கொண்டது போன்ற நடவடிக்கைகள் காரணமாக, பினாமி சட்டத்தை பயன்படுத்தியது சரியே எனவும் வாதிடப்பட்டது. 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments