கோவில் சிலைகளை பாதுகாக்க ஸ்ட்ராங்க் ரூம் கட்டப்பட்டதா? ; அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
தமிழ்நாடு முழுவதும் கோவில் சிலைகளை பாதுகாக்க ஸ்ட்ராங்க் ரூம் கட்டப்பட்டதா என்பது குறித்து மூன்று வாரங்களில் அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள தொன்மையான கோவில்களை பாதுகாப்பது தொடர்பாக, 2015ஆம் ஆண்டு உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இதன் விசாரணையின்போது, நீதிமன்றத்தின் உத்தரவுகளை அமல்படுத்தியது குறித்து அறிக்கை அளிக்க தமிழக அரசு தரப்பில் அவகாசம் கோரப்பட்டது.
இந்நிலையில் கோவில்களில் ஸ்ட்ராங்க் ரூம்கள் கட்டப்பட்டதா என்பது பற்றியும், உத்தரவுகளை அமல்படுத்தியது குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை மூன்று வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.
Comments