ஸ்ரீ நகர் பொதுக்கூட்டம் ; குண்டுதுளைக்காத கண்ணாடித் தடுப்புகளை அகற்றச் சொன்ன அமித் ஷா
ஸ்ரீநகரில் பொதுக்கூட்டத்தில் பேசிய போது குண்டுதுளைக்காத கண்ணாடித் தடுப்புகளை அகற்றச் சொன்ன மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜம்மு காஷ்மீர் மக்களிடம் வெளிப்படையாகப் பேச விரும்புவதாகத் தெரிவித்தார்.
370வது பிரிவை நீக்கிய போது, தான் கேலி செய்யப்பட்டதாகவும், கண்டனத்துக்கு ஆளானதாகவும் தெரிவித்த அவர், மக்களிடம் வெளிப்படையாகப் பேச விரும்புவதால் குண்டு துளைக்காத கண்ணாடித் தடுப்புகளோ, பாதுகாவலர்களோ இங்கு இல்லை எனக் குறிப்பிட்டார்.
பாகிஸ்தானுடன் பேச்சு நடத்த பரூக் அப்துல்லா கோரியதைக் குறிப்பிட்ட அமித் ஷா, நாட்டிலேயே வளர்ச்சியடைந்ததாகக் காஷ்மீரை மாற்ற இளைஞர்களிடம் பேச்சு நடத்த உள்ளதாகத் தெரிவித்தார்.
காஷ்மீரையும் லடாக்கையும் வளர்ச்சிப் பாதையில் கொண்டுசெல்வது தான் அரசியலமைப்பின் 370ஆவது பிரிவை நீக்கியதற்கான ஒரே காரணம் என்றும், அதற்கான முயற்சிகளின் பலனை 2024ஆம் ஆண்டில் காணலாம் என்றும் அமித்ஷா தெரிவித்தார்.
Comments