ஆயுஷ்மான் பாரத் நலவாழ்வு உட்கட்டமைப்புத் திட்டத்தை தொடக்கி வைத்தார் பிரதமர் மோடி!
புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளதால், அடுத்த பத்துப் பன்னிரண்டு ஆண்டுகளில் அதிக எண்ணிக்கையிலான மருத்துவர்கள் உருவாகுவர் எனப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசம் வாரணாசியில் ஆயுஷ்மான் பாரத் நலவாழ்வு உட்கட்டமைப்புத் திட்டத்தைத் தொடக்கி வைத்து அதற்கான செயல்பாட்டு வழிகாட்டுதல்களைப் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார்.
அப்போது பேசிய அவர், நாட்டு விடுதலைக்குப் பின் நெடுங்காலமாக நலவாழ்வு, உடல்நலம் பேணும் வசதிகளைச் செய்வதில் போதிய கவனம் செலுத்தவில்லை எனக் குற்றஞ்சாட்டினார்.
ஊர்ப்புறங்களில் மருத்துவமனைகள் இருக்காது, அப்படி இருந்தால் மருத்துவர்கள் இருக்க மாட்டார்கள் என்கிற நிலை இருந்ததாகச் சுட்டிக் காட்டினார். புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளதால் ஏழை மாணவர்கள் மருத்துவர் ஆகும் கனவு நிறைவேறும் எனத் தெரிவித்தார்.
Comments