கொலம்பியாவில் பத்தாண்டுகளாகத் தேடப்பட்ட போதைப்பொருள் கடத்தல் மன்னன் உசுகாவை சுற்றி வளைத்து பிடித்த ராணுவத்தினர் !
கொலம்பிய, அமெரிக்க அரசுகளால் பத்தாண்டுகளாகத் தேடப்பட்டு வந்த போதைப்பொருள் கடத்தல் மன்னன் ஓடோனில் எனப்படும் உசுகாவை அடர்ந்த காட்டுப்பகுதியில் கொலம்பிய பாதுகாப்புப் படையினர் பிடித்துள்ளனர்.
அமெரிக்காவுக்கு 74 டன் போதைப்பொருட்களைக் கடத்தியதாகப் பல நீதிமன்றங்களில் இவர் மீதான வழக்குகள் நிலுவையில் உள்ளன. தனக்கென ஆயுதங்கள் ஏந்திய 1200 பேர் கொண்ட தனிப்படையையே வைத்திருந்த அவரைப் பிடித்துக் கொடுத்தாலோ, துப்புக் கொடுத்தாலோ 6 கோடி ரூபாய் பரிசு எனக் கொலம்பிய அரசும், 37 கோடி ரூபாய் பரிசு என அமெரிக்க அரசும் அறிவித்திருந்தன.
இந்நிலையில் அமெரிக்க, பிரிட்டன் உளவுத்துறையினர் அளித்த தகவலையடுத்து ராணுவம், சிறப்புப்டை ஆகியவற்றைச் சேர்ந்த ஐந்நூற்றுக்கு மேற்பட்ட வீரர்கள், 22 ஹெலிகாப்டர்கள் மூலம் உசுகா பதுங்கியிருந்த இடத்தைச் சுற்றி வளைத்து அவரைப் பிடித்துக் கொண்டுவந்தனர்.
Comments