சொத்துக்குவிப்பு வழக்கு ; முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் லஞ்ச ஒழிப்புத் துறைத் தலைமை அலுவலகத்தில் விசாரணை

0 2671
முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் லஞ்ச ஒழிப்புத் துறைத் தலைமை அலுவலகத்தில் விசாரணை

சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறைத் தலைமை அலுவலகத்தில் விசாரணை நடத்தப்பட்டது.

வருமானத்துக்கு அதிகமாகச் சொத்துச் சேர்த்துள்ளதாக எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவர் மனைவி விஜயலட்சுமி, சகோதரர் சேகர் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக விசாரணைக்கு சம்மன் அனுப்பி இருந்த நிலையில் இன்று சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறைத் தலைமை அலுவலகத்தில் எம்.ஆர்.விஜயபாஸ்கரும், அவரது சகோதரர் சேகரும் விசாரணைக்கு ஆஜராகினர். இருவரிடமும் அதிகாரிகள் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments