ஆசை வார்த்தைகளை நம்பி தேமுதிகவை விட்டு செல்வது துரோகம்- விஜயகாந்த்!

0 2852

ஆசை வார்த்தைகளை நம்பி தேமுதிகவை விட்டு செல்வது தனக்கு மட்டுமல்ல கட்சிக்கும் செய்யும் துரோகம் என அக்கட்சித் தலைவர் விஜய்காந்த் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தனது உடல்நலத்தில் தொய்வு ஏற்பட்டிருப்பது உண்மை தான் எனவும் அதற்கு தேமுதிகவிற்கு எதிர்காலமே இல்லை என யார் நினைத்தாலும் அது தவறு என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் 100 ஆண்டுகள் ஆனாலும், தேமுதிகவை யாராலும் அழிக்க முடியாது எனவும், கழகத்தின் மீது அவதூறு பரப்புவர்களின் வார்த்தைகளை தொண்டர்கள் யாரும் நம்ப வேண்டாம் எனவும் விஜயகாந்த வலியுறுத்தியுள்ளார்.

மாற்று அணியினர் பேச்சிற்கு இணங்கி கட்சியை விட்டு செல்பவர்கள் பலவீனமானவர்களாக இருப்பதை காட்டுவதாகவும் , இதை எண்ணும் போது இக்கரைக்கு அக்கரை பச்சை என்பதை உணரும் நாள் வரும்  விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments